ஓர் அறிமுகம்

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு.

அன்பான ஆன்ம நேயம் கொண்டவர்களே உங்கள் திருவடிக்கு என் சிரம் தாழ்ந்திய முதல் வணக்கம். திருவள்ளுவர் தன் முதல் குறளில் இறைவனை பற்றி தெளிவாக கூறிவிட்டார் [அ] அகரம் என்ற முதல் உயிர் எழுத்தில் இருந்து [ன்] என்ற மெய் எழுத்தின் முடிவு வரை உள்ள  எழுத்துகள் அனைத்தும் அகரம் என்ற எழுத்து இணையாமல் உருவாகவில்லை. ஆகையால் அகரம் என்கின்ற அண்ட வெளியே இறைவன். அவனே ஆதிபகவன் என்று அந்த இறைவனால் இவ்வுலகம் தோன்றியது என்பதை அழகாக கூறி இருக்கிறார். நாம் பூமிக்குள் வாழவில்லை. பூமியின் மேல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பூமி அண்ட வெளியில் உள்ளது. அண்டவெளியில் கிரகங்கள் எண்ணில் அடங்கா நட்சத்திர கூட்டங்களூம் உள்ளது.

இவைகள் எல்லாம் எப்படி இயங்குகிறது?

எதனை அடிப்படையாக வைத்து இயங்குகிறது?

பால்வெளி அண்டத்தில் இயங்கும் இயக்கங்களும் கிரணங்களும் அதன் சக்தியும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்கப்பட்டது அல்ல. இது சத்தியமான உண்மை. இது அனைவரும் ஒப்புகொள்ள கூடியது. பால்வெளியில் உள்ள கட்டுபாடான இயக்கமே இறைவன் என்பதை நாம் ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும்.

அந்த இயக்கமே பரம் அணு என்றும் பரபிரம்மம் என்றும் பகவன் என்றும் இறைவன் என்றும் கடவுள் என்றும் நாம் பல்வேறு வடிவங்கள், முறைகள், பாதைகள், பெயர்கள் வைத்து அமைத்து கொண்டோம். இறைவனை பற்றி நன்கு அறிந்தவர்கள் ஞானிகள், மகான்கள், சித்தர்கள், யோகிகள், சாதுக்கள், ரிஷிகள், முனிவர்கள் இவர்களே இறை தத்துவத்தை மனித சமுதாயத்திற்கு எடுத்து உரைத்தவர்கள். ஆலயங்கள், பல வகையான நூல்கள், பல காவியங்கள், புராண கதைகள், பாடல், நாடகம், நடனம், இசை, ஓவியம், சிற்பம் போன்ற பல பரிமாணங்களில் இறை தத்துவத்தை நமக்கு கொடுத்து சென்று உள்ளனர். இதைவிட புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை

அனைத்தையும் இவ்வுலகில் கொடுத்து சென்று இருக்கிறார்கள். ஞானிகள், மகான்கள், சித்தர்கள், யோகிக்கள், சாதுக்கள், ரிஷிகள், முனிவர்கள் இத்தனை பேரும் நமக்கு கொடுத்து சென்றது ஏன் புரியவில்லை? புரியாத மொழியில் எழுதவில்லை. நாம் அறிந்த தமிழ் மொழியில் தானே எழுதி இருக்கின்றார்கள். காரணம் அறிவை வளர்ப்பதை விடுத்து ஆசையை வளர்த்து கொண்டோம். ஆசையால் நமக்கு புரியவில்லை அதனை எடுத்து சொல்ல சரியான ஆட்கள் இல்லை. தற்போது 100 /- க்கு 99.5 % சதவீதம் போலியான போலி சாமியார்களே பணம், பதவி, பெயர், பெருமை, ஆசை என்ற மாயயை தான் மனதுக்குள் வைத்து கொண்டு வேடம் இட்டு மனிதர்களிடம் ஏய்த்து பிழைத்து கொண்டு இருக்கின்றனர்.

போலியானவர்களை எப்படி அறிவது? உண்மையான ஞானிகளோ யோகிகளோ உலகத்தில் எதனையும் ஆசைபடுவது இல்லை. பற்று அற்ற நிலைக்கு செல்வது தானே ஆன்மீகம். இதை திருகைவல்லிய நவநீதம் நூலில் முதல் பாடல்

பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்.

தன்னில் அந் தரத்தின் சிவ சாட்சிமாத் திரமாய் நிற்கும்

எந்நிலங்களினும் மிக்க ஏழு நிலம் அவற்றின் மேலாம்.

நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி.

மூன்று ஆசைகளே எல்லாவற்றிக்கும் அடிப்படையாக உள்ளது. ஆகையால் இம்மூன்று ஆசைகளும் பொறுத்தியவர் அஞ்ஞானி. இம்மூன்று ஆசைகளையும் நீக்கியவர்களே – ஞானிகள் என்று ஸ்ரீ தாண்டவராயர் சுவாமிகள் மிக தெளிவாக கூறுகிறார். இதே போல பல உண்மைகள் இந்த திருகைவல்லிய நவநீதம் நூலில் புதைந்து இருக்கின்றது. இந்நூலுக்கு விளக்கம் எழுதுகிறேன் என்று தற்காலத்தில் முன் வருகிறார்கள். அவர்கள் அனுபவம் அற்றவர்களே தேன் இனிக்கின்றது என்று படித்து விட்டால் இனிப்பின் சுவை அறிய முடியுமா? தேனை ருசித்தால் தானே அதன் சுவையை அறிய முடியும் அதன் அனுபவத்தை அறிந்தவர்களே அந்த சுவையை எழுத முடியும். திருகைவல்லிய நவநீதம் நூலை பாராயணம் செய்து, பாடம் கேட்டு அதனை நன்கு கற்று அதனை முழுமையாக உணர்ந்து அதன் வழி வாழ்ந்தவர்களே அதற்கு சரியான விளக்கம் எழுத முடியும்.

இது தானே முறை. அதுவே தான் விளக்க உரை !

யார் குரு?

குரு என்றால் ஆசான், ஆசிரியர், என்றே நமக்கு தெரிந்தவை. இதன் சரியான விளக்கம் நமக்கு கற்று தருபவர் அல்லது சொல்லி கொடுப்பவர் என்பதே பொருள் நம்மை நல்வழியில் அழைத்து சென்று நல்லவைகளை சொல்லி தருபவர்களே குரு அப்படிபட்ட குரு யார் இருக்கின்றார்கள்? இருக்கிறார்கள் அந்த குருவை தேடுவது நம் கடமை. யார் அந்த குரு?

பிறப்பால் – பிரம்மம்            வளர்ந்தால் – அறிவு

தெளிந்தால் – ஞானம்          முதிர்ந்தால் – முக்தி

முக்தியே – மோட்சம்           மோட்சமே – பிரம்மம்

இவை அனைத்துக்கும் காரணமாக உள்ளது நம் மூளை என்ற அறிவு நிலையே.

அறிவை அறிவால் அறிவதே அறிவு இப்போது நீங்கள் இதை படிப்பதே அறிவின் துணை கொண்டுதான் இதனை அறிகிறீர்கள். உங்களுக்கு உலகத்தையும் உலக செயல்பாட்டையும் உலக இயக்கத்தையும் அண்ட வெளியில் இருக்கும் மர்மங்களையும் அறிந்து கொள்வது இந்த அறிவே அறிவின் துணை கொண்டு ஒவ்வொரு ஜீவனும் இயங்குகிறது. அந்த அறிவு நிலையை தான் ஆன்மீகத்தால்

ஓர் அறிவு   –   புல், பூண்டு, தாவர இனங்கள்

ஈர் அறிவு   –   புழு, பூச்சி இனங்கள்

மூவறிவு     –   நீர் வாழ்வன

நான்கறிவு  –   பறவைகள்

ஐந்தறிவு    –   மிருகங்கள்

ஆறறிவு     –   மனிதர்கள்

என்னும் அறிவு நிலையை பிரித்து அதையே ஆறு மனமாக வைத்தி ஆறு சுவைகளாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆன்மீக அறிவின் துணை கொண்டுதான் நாம் இறைவனையே அறிகிறோம். இறுதியில் ஈசன் என்ற இறை தத்துவத்தை அறிவு தானே அறிகிறது. அப்படியானால் இறைவனையே அறிந்து கொண்ட அறிவு இறைவன் தானே. அறிவே இறைவன், அன்பே அதற்கு செல்லும் வழி. இத்தனையும் கற்றது அறிவுதானே. இதுவே தானே உனக்கு குருவாக முடியும். இதன் அடிப்படையில் அறிவே குரு. உன் அறிவு எந்த வகையிலும் உன்னிடம் எதனையும் எதிர் பார்க்கவில்லை. அந்த அறிவே மெய் குரு. ஆன்மீக செய்திகளை எடுத்து உரைப்பவர்கள் சொற்குருவே உலகில் பொய்குருக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை நாம் அறிவால் தான் அறிய வேண்டும்.

போலியானவர்களுக்கு தானே விளம்பரம் தேவைப்படுகிறது. உண்மை அமைதியாக தான் இருக்கும். உண்மையான குரு உங்கள் அறிவே என்பதை உங்கள் அறிவால் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் ஆணவம் இருக்க கூடாது.

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் சொற்குரு. எழுத்துகளை அறிவித்தால் உன்னுள் இருக்கும் மெய்குரு அதனை ஏற்று கொள்கிறது. இதன்படி அறிவே முதன்மை ஆகிறது. அதுவே இறைவ்ன் என்கிறது இந்த பலமொழி.

புறத்தே தேடும் குருக்கள் அறிவின் துணை கொண்டு தேடுங்கள். விளம்பரங்களையும், வேடங்களையும் மாயா ஜாலங்களையும் சித்து வேலைகளையும் அழகான வார்த்தை ஜாலம் கலந்த பேச்சுகளையும் நம்பி மயக்கத்தை தெளிந்து உன் அறிவே உனக்கு குரு என்று எண்ணி நாம் முன் வாழ்ந்த அனுவம் மிக்க இறைவனோடு கலந்த பல ஞானிகள், மகான்கள், யோகிக்கள், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இவர்களால் இயற்றப்பட்ட நூல்களை தன் அறிவின் துணை கொண்டு கற்று உணர்ந்து செல்லுங்கள். இந்த இறைவெளியில் பயணம் செய்ய சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத பெற்ற ஆதிசங்கரரின் மரபில் வந்த ஸ்ரீநாராயண தாண்டவராயரால் இயற்றபெற்ற திருகைவல்லிய நவநீதம் இந்நூலின் வழியே பிழை இல்லாமல் வாழ்ந்த தவதிரு பழனியப்ப சுவாமிகளின் விளக்க உரையை படித்து நன்கு கற்று உணர்ந்து இறைவன் திருவடி அடைய எல்லாம் வல்ல இறைவனே அருள் செய்ய வேண்டும்.

 

குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவோ மகேஸ்வர

குருஸாக்ஷாத் பர ப்ரம்மஹ தஸ்மைஸ்ரீ குருவே நமஹ

 

அறிவை அறியும் அறிவு எவ்வறிவோ

அவ்வறிவே மெய் அறிவு.